பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்! வியாசர்பாடியில் பரபரப்பு!

406

சென்னை வியாசர்பாடி முல்லைநகர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி.

இவர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்தி விட்டு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து லட்சுமியை பலாத்காரம் செய்துள்ளான்.

அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மடக்கி பிடித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் அவன் எழில்நகரை சேர்ந்தவன் என்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.