வயிறு வலிக்குது..! குவா.., குவா..! 17 வயது சிறுவனால் அதிர்ந்த போலீஸ்..!

1839

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் வயிற்று வலியின் காரணமாக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம், அவருக்கு வந்தது, வயிற்று வலி இல்லையாம், பிரசவ வலியாம். உடனே மருத்துவர்கள் பிரசவம் பார்க்க, சிறுமிக்கு பெண் குழந்தை ஒன்று தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

பிறகு தான் தெரிந்தது, அந்த 17 வயது சிறுவன் செய்த காரியம். 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும், உடன் படிக்கும் 17-வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பழக்கம் திடீரென காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இதன் விளைவே தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து, பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே ஒப்படைக்கப்படும். 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of