சிக்கித்தவித்த சிறுமி.. உதவி கேட்டு போன சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!

596

மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கிய 17 வயது சிறுமி, திறந்து கிடந்த சாக்கடைக்குள் விழுந்து மறையும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.


அலஜாண்ட்ரா டெர்ராஸஸ் என்ற 17 வயது சிறுமி, பள்ளியின் சிறந்த வாலிபால் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். அவர், கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

கார்களையே இழுத்துச் செல்லும் வெள்ளத்தில், அருகில் தத்தளித்த மற்றொரு பெண்ணிடம் உதவி கோரினார். அவர் நீட்டிய உதவிக் கரத்தை பற்றும் தருவாயில் வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இருப்பினும் சமாளித்து கைக்குப் பிடிமானமாக ஏதேனும் சிக்கும் என நடந்து சென்ற போது, அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து மறைந்தார்.

வெள்ளியன்று அலெக்ஜாண்ட்ராவின் உடல் மீட்கப்பட்டது. 3 ஆண்டுகளாக சாக்கடை திறந்திருப்பதாக புகாரளித்தும், அதை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.

இச்சம்பவத்துக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், சாக்கடையை சீர்செய்ய யாரையேனும் அனுப்பியிருக்க வேண்டும் என்றும் அந்நகர மேயர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

பொறுப்பைத் தட்டிக் கழித்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என உணர்ந்துகொண்டதாகக் கூறிய அவர், சட்டப்படி வழங்கப்படும் தண்டனை எதுவாக இருப்பினும் ஏற்பதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து தற்காலிகமாக தன்னார்வலர்களின் முயற்சியில் பாதாள சாக்கடை அடைக்கப்பட்டது.