ஒரே நாளில் 172 பேருக்கி கொரோனா தொற்று.. – உ.பி. சுகாதாரத்துறை

163

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2300க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 42 பேரும் இதில் அடங்குவர்.

ஏற்கனவே உ.பி.யில் 113 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of