17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு

213

3 முறை ராஜஸ்தான் எம்எல்ஏ.,வாக இருந்த ஓம்பிர்லா, பா.ஜ., இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார். கோட்டா தொகுதியில் இருந்து இருமுறை எம்.பி.,யாக லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட ஓம்பிர்லா, தற்போது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓம்பிர்லாவிற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டள்ள ஓம்பிர்லாவை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஓம்பிர்லாவை வாழ்த்தி, புகழ்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ஒரு மனதாக லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லாவுக்கு வாழ்த்துக்கள். ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி.

ஓம்பிர்லா அறிவின் ஊற்றுக்கண். ஒருநாள் கூட ஓய்வின்றி, உழைத்து தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம்பிர்லா. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடக் கூடியவர்.
பெரும்பாலான எம்.பி.,க்களுக்கு ஓம்பிர்லாவை நன்கு தெரியும். ராஜஸ்தான் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடியவர் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of