அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வருகிற 13-ந்தேதி விருப்ப மனு

164

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது. என்று இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.