கூட்டி, பெருக்க ரூ.18 லட்சம் சம்பளம்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

6412

ராணி எலிசபெத்தின் அரண்மனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்குத் தேர்வானோர் வின்ட்சர் காஸ்டில் அரண்மனை மட்டுமல்லாமல், பக்கிங்காம் அரண்மனை உள்ளிட்ட பல்வேறு அரண்மனைகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால், இந்த பணிக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்றும், நவம்பர் 2ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பணியில் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்துப்படி ஆகியவை இல்லாமல், தொடக்க ஊதியமாக 18லட்சத்து 50ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement