18 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்.. – கடும் நெருக்கடியில் காங்கிரஸ்.. கூலாக இருக்கும் பாஜக..!

456

மாலை 6 மணி நிலவரப்படி மஹாராஷ்டிராவில் 60.5 சதவீதமும் அரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடந்தது.

தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மழை பெய்த போதிலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். மாலை 6 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 76.41 சதவீதமும் , நாங்குநேரியில் 66.10 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.

இடைத்தேர்தல் என்ற போதிலும், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பே ஓட்டுச்சாவடிக்கு சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஆனால் சட்டசபை தேர்தல் நடக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மிக மந்தமாகவே ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 சதவீதமும், மகாராஷ்டிராவில் 60.5 சதவீதமுமே ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.

இவ்விரு மாநிலங்களிலும் காங் – பா.ஜ.க இடையே நேரடி போட்டி உள்ளதாலும், லோக்சபாவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும் முக்கியமானதாக இவ்விரு சட்டசபை தேர்தல்களும் பார்க்கப்படுகிறது.

ஆனால் மோசமாக பதிவாகி வரும் ஓட்டுப்பதிவு அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ்க்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்வியில் இருந்து இன்னும் மீளாத காங்., கட்சி, இந்த இரு மாநில சட்டபை தேர்தல்களை தான் மலை போல் நம்பி உள்ளது.

ஆளும் பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறி வரும் காங்.,ன் பிரசாரத்தை உண்மையாக்கும் மிகப் பெரிய ஆயுதமாகவே இந்த தேர்தலை காங்., பார்க்கிறது.

ஆனால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை விட மிகக் குறைவாகவே சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கள் பதிவாகி வருவதால், இது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்ற குழப்பம் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் வந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of