போராட்டம் நடத்தியதற்காக சிறுவன் பெற்ற மரண தண்டனை!

837

ஷியா பிரிவினரை அரசு நடத்தும் விதம் சரியில்லை எனக் கூறி சவூதி அரச குடும்பத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில், முர்தஜா குரேய்ரிஸ் எனும் சிறுவன் பெற்றோருடன் மிகச்சிறுவயதில் இருந்தே பங்கேற்றவன்.

அப்படிப்பட்டதொரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அச்சிறுவனின் மூத்த சகோதரர் ஏற்கெனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தையும் மற்றொரு சகோதரரும் சிறை சென்றுள்ளனர்.

இதேபோன்றதொரு போராட்டத்தில் முர்தஜா தனது 10-வது வயதில் பங்கேற்றமைக்காக, 13-வது வயதில் குடும்பத்துடன் பயணித்து கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

மூன்றரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவும், பின் தீவிரவாதம், போராட்டத்தில் பங்கெடுத்தல், போலீசாரைத் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளியாகவும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement