தோழியுடன் சென்ற நபர்.. அடித்தே கொன்ற குடும்பத்தினர்..

2688

டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த ராகுல் ராஜ்புத், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும், அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண ஒருவருக்கும், நட்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இவர்களின் நட்பு, இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி அன்று, தோழியுடன் ராகுல் சென்றுக்கொண்டிருந்தபோது, அவரை அப்பெண்ணின் குடும்பத்தினர் வழிமறித்துள்ளனர்.

அப்போது, ஏற்பட்ட தகராறில், ராகுல் கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராகுலை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அப்பெண்ணின் சகோதரன் முகமது ராஜ் உட்பட 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement