அதிகாரிகளின் அலட்சியத்தால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்

292
peddy

காஞ்சிபுரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், அரசு கொள்முதல் செய்திருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கனமழை பெய்ததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் நனைந்து நாசமாகின. மூட்டைகளை தார்பாய் போட்டு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே நெல் மூட்டைகள் வீணாகியதற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here