முதல்வர் செய்த விபரீதத்தின் விளைவு? 19 மாணவர்கள் தற்கொலை!

592

தெலுங்கானாவில் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்பட்டது. இதை தாங்கி கொள்ள முடியாத 19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தெலுங்கானா கல்வித்துறையை முதல்வர் சந்திரசேகராவ் சீரழித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், முதல்வர் செய்த விபரீதத்தின் விளைவாக இவ்வாறு நடந்துள்ளது என்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தையும் எவ்வித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்ய முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of