தகாத உறவின் மோகம்..! கள்ளக்காதலனுக்கு மகளை தாரைவார்த்த தாய்..!

1388

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தேவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவருக்கு 19-வயது ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் தன்னுடைய காதலனுக்கு திருமணம் நடைபெற உள்ளது என்றும், அதனை தடுத்து நிறுத்தி எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஜோடிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்த பெண்ணின் தாயார் உடன் வந்திருந்தார்.

விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே தேவி, தனது உடலில் கெரசினை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக கூறி போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தார். பின்னர் போலீசார் அந்த பெண்ணிற்கு புத்தமதி கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தேவியின் காதலனிடம் விசாரணையை நடத்திய போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தேவியின் அந்த காதலன், தேவியை காதலிக்கவில்லை என்றும், தேவியின் அம்மாவை தான் காதலிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அதில், தனக்கும், அந்த வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், தனது மகளை அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தால், கள்ளக்காதலை தொடராலம் என்றும் தேவியின் தாயார் தெரிவித்தார். மேலும், இதனால் தான் மகளைக் காதலிக்க சொல்லி தூண்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of