நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு 199 கோடி ரூபாய் தேவை – ஓ.பன்னீர்செல்வம்

128

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு 199 கோடி ரூபாய் தேவை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மழை சேத பாதிப்புகளை ஆய்வு செய்த பின் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, 3 நாட்களில் பெய்ததே சேதத்திற்கு காரணம் என தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 15 நாட்களில் தற்காலிக குடியிருப்புகளும், முழுமையாக சேதமடைந்த வீடுகள் 6 மாதங்களில் கட்டி தரப்படும் என்று உறுதியளித்தார்.

500 ஏக்கர் பரப்பிலான பயிர்கள், 150 கிலோ மீட்டர் சாலைகள் மற்றும் மூன்றரை கிலோ மீட்டர் மின்பாதைகள் சேதம் அடைந்துள்ளதாக கூறினார். மாவட்டத்தின் மறுசீரமைப்பு பணிக்கு 199 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்றும், இது குறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of