இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் மதராசபட்டினம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்‌சன். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி என நடித்தவர் அப்படியே இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்தார்.

இருப்பினும் எதிர்பார்த்தபடி ஏமியால் திரையில் ஜொலிக்க முடியவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் இவர் நடித்திருக்கும் 2.0 திரைப்படம் வரும் வியாழனன்று வெளியாகிறது. இயக்குநர் ஷங்கர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, அதிகப் பொருட் செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கிடையே, 2.0 படத்தின் படபிடிப்பிற்கு முன்பு, பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஏமிக்கு அளித்த பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் . “இது தான் எங்களின் முதல் பயிற்சி, எளிதில் தவறுகளை கண்டறிய முடியும் என்பதால், இதனை நாங்கள் ஸ்லோ மோஷனில் படமாக்கினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.