மூன்றரை மணி நேரத்தில் ரூ.2.68 கோடி நஷ்டம்.! காரணம் ஆட்டுக்குட்டி..!

1846

ஓடிசாவின் மகாநதி கோல்ஃபீல்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று, தால்செர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி வந்தது. அப்போது, திடீரென இடையில் வந்த ஆட்டுக்குட்டி ஒன்று, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

இதையடுத்து உயிரிழந்த அந்த ஆட்டுக்குட்டிக்கு நஷ்டஈடாக, ருபாய் 60 ஆயிரம் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டின் உரிமையாளர்கள் லாரி ஓட்டுநரிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று தால்செர் சுரங்கத்தில் நுழைந்த அப்பகுதி பொதுமக்கள், லாரிகளை வெளியே விடாமல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மூன்றரை மணி நேரம் தாமதமாக அந்த லாரிகள் சென்றது. இந்நிலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த முற்றுகைப்போராட்டத்தால் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மகாநதி கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தால் அரசாங்கத்திற்கும் 46 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர், இது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.