இரண்டு கையிலும் பந்துவீசி அசத்தும் அதிசய பவுலர்..!

1358

தென்ஆப்பிரிக்காவில் தற்போது மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் கேப் டவுன் பிளிட்ஸ் அணியும், டர்பன் ஹீட் அணியும் மோதியது.

முதலில் இறங்கிய கேப் டவுன் பிளிட்ஸ் அணி 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி விளையாடியது. அப்போது மலோக்வானா என்ற சுழற்பந்து வீச்சாளர் 8-வது ஓவரை வீசினார். அவர் 2-வது பந்தை வலது கையால் வீசினார். அந்த பந்தை அடித்த எர்வீ மிட் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

மீண்டும் 10-வது ஓவரை வீசினார். அப்போது 5-வது பந்தை இடது கையால் வீசி விலாஸ் என்பவரை போல்ட் ஆக்கினார்.இறுதியாக கேப் டவுன் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement