2 இங்கே இருக்கு..! மீதி 2 எங்க? – ஆபத்தான நிலையில் அரசு பேருந்து

995

பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் பின்புறம் 2 டயர்களோடு இயக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் பின்புறம் 2 டயர்கள் உள்ளது. பொதுவாக ஒரு பேருந்திற்கு 6 டயர்கள் இருக்க வேண்டும்.

பின்புறம் 4 டயர்களும், முன்பக்கம் 2 டயர்களும் இருக்கும். ஆனால் இந்த பேருந்தில் மொத்தம் 4 டயர்கள் மட்டுமே உள்ளது. பயணிகள் பயணம் செய்யும்பொழுது அந்த பேருந்தின் அதிக எடை காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் போக்குவரத்துத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of