தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு

459

தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.

முன்னதாக நேற்று தி.மு.க சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ.அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் பங்கேற்பார்கள் என்று தி.மு.க தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பொறுப்புக்கு வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of