குப்பைக்கொட்டுனது குத்தமாய்யா..? 2 பெண்கள் வெட்டிப் படுகொலை..!

728

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பன்னீர். இவ்விரு குடும்பங்களுக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த தகராறின் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு அன்று பன்னீரின் சகோதரர்கள் சுதாகரை கொலை செய்தனர். இந்தக்கொலைக்கு எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சுதாகரின் தம்பி சுரோஷ் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று பன்னீரின் தாய் மற்றும் அவரது அத்தையை தனியாக வீட்டின் அருகில் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அரிவாளுடன் வந்த சுரேஷ், இரண்டு பேரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சுரேசை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சுதாகருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Advertisement