உலகளவில் மருத்துவமனைகளுக்கு விருது – தமிழகத்தில் 2 மருத்துவமனைகள் தேர்வு

1076

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, தேசிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தொழில்சார் சுகாதார அறிவியல் நிறுவனம் இணைந்து வைரஸ் காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பில் மிக சிறப்பாக  செயல்பட்டதற்கான விருதுகளை அறிவித்துள்ளது.

இந்த விருதுகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளில் இருந்து விண்ணப்பங்கள் CAHO எனும் தேசிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவைகளின் கூட்டமைப்பால் பெறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சிறந்த மருத்துவமனைகள் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய, பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள் என வகைப்படுத்தப்பட்டு, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய மருத்துவமனை பட்டியலில், வேலூர் CMC மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. பெரிய மருத்துவமனைகள் பட்டியலில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடத்தை பிடித்து விருதுக்கு தேர்வாகியுள்ளது.

உலகளவில் இருந்து பங்கேற்ற மருத்துவமனைகளில் இருந்து தமிழகத்தில் இரண்டு மருத்துவமனைகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பணியாளியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியது, பணியிடத்தில் எவருக்கும் தொற்று ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டதை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.