தமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்

127

சென்னை லயோலா கல்லூரியில் கீழடி முதல் சிந்துசமவெளி அகழாய்வுகள் குறித்து நடைபெற்ற கருத்தரங்கை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிதிலமடைந்த 10 கோட்டைகளை தமிழக அரசு சார்பில் மறு சீரமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

கீழடியை சுற்றியுள்ள 3 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக குறிப்பிட்ட அவர் தொல்லியல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசும், மத்திய அரசும் ஈடுபட்டுள்ளது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் அதிகளவு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்வி கொள்கைக்கு ஒரு இறுதி வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of