தமிழகத்தில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள்: பிரதமர்க்கு முதல்வர் நன்றி

108

தமிழகத்தில் 9 இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

தற்போது 2 இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசின் 60% நிதி மற்றும் மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் இந்த இரு மருத்துவ கல்லூரி அமைக்க உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரே நேரத்தில் 2 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை. இதற்கென ஆகும் செலவில் 3575 கோடி ரூபாயில் 2145 கோடி ரூபாயை வழங்க உள்ளது மத்திய அரசு.

தமிழ்நாடு அரசின் பங்காக 1430 கோடி ரூபாய் வழகப்படும். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of