நள்ளிரவு முதல் உதயமானது 2 புதிய யூனியன் பிரதேசங்கள்..! இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலம்..!

669

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் சர்தார் வல்லபாய் பிறந்தநாளான இன்று முதல் தனித்தனியாக செயல்பட தொடங்கியுள்ளன. இதையடுத்து சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திரா முர்மு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேபோன்று சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமான லடாக்கின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணா மாத்தூரும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் பதவியை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்கான பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement