திடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..

417

திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மின் தடையால், ஆக்ஸிஜன் விநோயகம் தடைப்பட்டு 2 நோயாளிகள் உயிரிழந்தது தெரியவந்தது.

மருத்துவமனை வளாகத்தில் கட்டுமான பணி செய்து வந்த ஒப்பந்ததாரர் மின்சார ஒயர்களை துண்டித்ததால், மின் தடை ஏற்பட்டதாகவும், ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டுள்ளார்.