ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு

703

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அகவிலைப்படி உயர்வால்18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு சுமார் ஆயிரத்து157 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of