ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…

352

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது மூண்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.