சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை – 2 டன் குட்கா பறிமுதல்

297

அழிஞ்சிவாக்கம் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சென்ற 2 சரக்கு வாகனங்களை மடக்கி பிடித்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில், 10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஒரு வாகனத்தில் இருந்த இருவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்ற வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதனைத்தொடர்ந்து கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.