20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக

216

வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக முழு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில், 20 இடங்களில் திமுக கட்சியும், மற்ற 20 இடங்களில் திமுக வின் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.

அதில் அதிகபட்சமாக, புதுவையை சேர்த்து 10 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

மற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு,

மதிமுக 2

விசிக 2

மார்க்சிஸ்ட் 2

கம்யூனிஸ்ட் 2

இந்திய யுனியன் முஸ்லீம் லீக் 1

கொங்கு நாட்டு தேசிய கட்சி 1

என தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.