தாலிபான் தீவிரவாத தாக்குதல்.. உயிரிழந்த 20 ராணுவ வீரர்கள்.. பரபரப்பு சம்பவம்..

2159

உலக நாடுகளின் மூலம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்று தாலிபான். அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வரும் இந்த இயக்கம், இதுவரை பல்வேறு உயிர்களை காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானின் ஃபரா பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது, தாலிபான் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில், இதுவரை 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, அந்நாட்டு ராணுவ ஆயுதங்களையும், அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தாலிபான் இயக்கத்தின் தரப்பில், 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement