20 லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் – இ-டெண்டர் வெளியீடு

482

20 லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக போதிய நிலக்கரியை மத்திய அரசு வழங்காததால் தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியதாக தகவல் வெளியானது. முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூடுதல் நிலக்கரி வழங்குமாறு வலியுறுத்தி இருந்தார்.

அதனை அடுத்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு நாள்தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் வெளிநாடுகளில் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனை அடுத்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை மத்திய அரசு மூலம் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of