காய்கறி வாங்க சென்ற பாட்டி..! சீரழித்த 20 வயது இளைஞர்கள்..! அதுமட்டுமில்லை…

1559

புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த 50- வயது பெண்மணி ஒருவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கணவனை இழந்த, தனியாக பிள்ளைகளை வளர்த்து வரும் இவர், காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.

இந்நிலையில் இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 20-வயது இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர் அந்த பெண்மணியை அங்கேயே விட்டுவிட்டு, அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த அந்த பெண்மணி, நடந்தவற்றை மகனிடம் கூறியுள்ளார்.

பின்னர் அவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்த அந்த இளைஞர்களை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of