200 சதவீதம் சுங்கவரி ! தீர்மானம் நிறைவேறியது

516

அண்மையில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவுக்கு மிகவும் உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.

மேலும், பாகிஸ்தானில் உற்பத்தியான மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களின் மீது 200 சதவீதம் சுங்கவரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்தது.

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆலோசனைப்படி, இதற்கான அறிவிக்கை 16-2-2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த முடிவுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைக்கோரி மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்த தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of