200 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசம்…! முதல்வர் அறிவிப்பால் எதிர்க்கும் பாஜக..!

655

டெல்லியில் நேற்று முன்தினம் புதிய மின்சார கட்டண விவரங்களை டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இதில் சில பிரிவுகளில் கட்டண குறைப்பும், பிற பிரிவுகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் இருந்தது.

இந்நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தலைநகர் டெல்லியில் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர், மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார். அதே போல 201 யூனிட் முதல் 401 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்றார்.

கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விரைவில் டெல்லி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவே, இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டியுள்ளன.

Advertisement