ஏ.டி.எம்.களில் இனி ரூ.2,000 நோட்டு வராது!

222

மார்ச் 1 முதல் ஏ.டி.ஏம். இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வராது. வங்கி நிர்வாகம் வங்கி கிளைகளுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் என கூறப்பட்டிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு வரும் போது அதை தொடார்ந்து புதிய 2000,500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

முதலில் 2000 நோட்டு தான் புழக்கத்திறகு வந்தது. அதற்கு சில்லரை கிடைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பின் 500 ரூபாய் நோட்டுகள் வந்தது. மேலும் அதிகளவு ஏ.டி.எம் இயந்திரங்களில் அதிக நேரம் 2000 நோட்டுகள் தான் வருகிறது.

இதனை பெற்றுக்கொண்ட மக்கள் அதற்கு சில்லரை மாற்ற சிரமம் படுகிறார்கள். இதனை ஒரு குற்றச்சாட்டாக ஏற்று கொண்டு வங்கி நிர்வாகம் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதற்குப் பதில், 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் நிரப்பினால் போதும். இந்த உத்தரவு, மார்ச், 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of