2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்திய RBI..! அதிகாரப்பூர்வ தகவல்..!

706

இந்தியாவின் பணத்தை அச்சடிப்பது ஆர்.பி.ஐ ஆகும். இந்தியாவில் பணப்புழக்கம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் அந்த வங்கியே முடிவு செய்யும். கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து புழகத்திற்கு வந்தவை தான் தான் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். இந்நிலையில், ஆர்.பி.ஐ வருடாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2018-ஆம் ஆண்டு, 33 ஆயிரத்து 632 லட்சம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது என்றும், மார்ச் 2019-ஆம் ஆண்டு கடைசியில், 32 ஆயிரத்து 910 லட்சம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில், 27 ஆயிரத்து 398 லட்சம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துக்கொண்டே வருகிறது.

ஒரு புறம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்துக்கொண்டு வந்தாளும், மற்றொரு புறம், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வருகை ஏ.எடி.எம்.களில் கூட குறைந்து வருகிறதாம். 2019-20  ஆண்டுகளில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கூட அச்சடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.