“ரூ. 2000 நோட்டுக்களை ATM-லிருந்து நீக்குங்க” – இந்தியன் வங்கியின் பகீர் அறிவிப்பு..!

542

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து புதிய 500 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என இந்தியன் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of