2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு

325

விழுப்புரத்தை அடுத்த கொடுக்கூர் என்ற கிராமத்தில், செங்கல்சூளைக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது, பழமையான கலைப்பொருட்கள் கிடைத்ததைக் கண்டு தொல்லியல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அகழாய்வு நிபுணர்கள் ஆராய்ந்ததில்,கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மருந்துக்குடுவைகள், பானைஓடுகள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இதையடுத்து அந்தபகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் சென்று பார்வையிட்டனர். பழங்கலைப்பொருட்கள் கிடைத்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தொல்லியல்துறை ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஒருவாரகாலத்தில்  திருவக்கரை கொடுக்கூர் கிராமத்தில் அகழாய்வுப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Advertisement