திருப்புவனம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறை கிணறுகள் கண்டெடுப்பு

840

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 2ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் பாதையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய போது, உறை கிணறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கீழடி, பசியாபுரம் பகுதிகளில் கிடைத்த உறை கிணறுகளை விட, லாடனேந்தல் உறை கிணறு மிகவும் வித்தியாசமாக இருப்பதாக தொல்லியில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்க கூடும் என்று தெரிவித்த அவர்கள், தற்போது 10 அடி வரை தான் தோண்டியுள்ளதாகவும், முழுமையாக தோண்டினால் தான் கிணற்றின் அமைப்பு தெரியவரும் என்றும் கூறினர்.