நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடுவதில் சிக்கலா..?

324

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கில் போட டெல்லி கீழமை நீதிமன்றம் கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டது.

இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பியுள்ளார். ஏற்கனவே வழங்கிய மனுவில் முறையான காரணங்களை தெரிவிக்கவில்லை என அந்த கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருணை மீது இன்றைக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்காவிட்டால், குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடுவது தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.