சிறுமி பாலியல் வன்கொடுமை. 5 ஆண்டுகள் கழித்து அதிரடி தீர்ப்பு

680

சேலம் வாழப்பாடி அருகில் உள்ள சென்றாயம்பாளையத்தில் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி, 10 வயது சிறுமியை 5 நபர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் அவர்களின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று சேலம் மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட பேருந்து நடத்துனரும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினருமான பூபதிக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மேலும் கூட்டாளிகளான ஆனந்த் பாபு, பாலு, பிரபாகரன், கிருஷ்ணன் ஆகிய மற்ற 4 குற்றவாளிகளுக்கும் தலா 37 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.