ஐபிஎல் போட்டி ராணுவ இசை உடன் தொடக்கம்

634

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இந்த முதல் போட்டி நடக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையிலும், பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி தலைமையிலும் களம் இறங்குகின்றன. கடந்த முறை காவிரி விவகாரத்தால் சென்னையில் போட்டிகள் நடைபெறாமல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்ய விருக்கின்றன. வழக்கமாக புல்வாமா ஐபிஎல் போட்டிகள் என்றாலே தொடக்கவிழா என்று ஊறுப்பட்டதை செலவு செய்வார்கள்.

ஆனால் இன்று தொடங்கும் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இன்றைய போட்டியின் முழு வருவாயும் கொடுக்கப்பட இருக்கிறது.

அதனால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தொடக்க விழாவிற்கு ஆகும் முழு தொகையை ராணுவ வீரர்களின் குடும்பத்திற்குக் கொடுக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நடைபெறும் போட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்தொகையை ஐபிஎல் நிர்வாகிகள் ராணுவ வீரர்களிடன் வழங்குகின்றனர். இதில் முக்கியமாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் ராணுவ வீரர்களின் இசைக் கருவிகல் இசைக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of