2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு..!

248

பத்ம விபூஷண் விருதுக்கு ஏழு பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 16 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 118 பேரும் தேர்வாகியுள்ளனர். இறப்புக்கு பிந்தைய பத்ம விபூஷண் விருதாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதுபோல, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசன், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆனந்த் மகேந்திரன், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

இவர்கள் தவிர, தமிழகத்தை சேர்ந்த 5 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்தி திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர், நடிகை கங்கனா ரணாவத் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of