2020 கிலோ கலாம் உருவ ‘கேக்’ ஆசிய சாதனை

74

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உருவம் பொறித்து  2,020 கிலோவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட கேக். ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ரோட்டரி சங்கம் மற்றும் கேக் வேல்டு நிறுவனம் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற கனவை நினைவுகூரும் வகையில் சில தினங்களுக்கு முன் புதிய முயற்சி மேற்கொண்டன.

இதன்படி, 2,020 கிலோவில், அவரது உருவம் பொறித்த, பிரமாண்ட கேக்கை, 30 பேர் சேர்ந்து தயாரித்தனர்.

ஆசியாவிலேயே முதல் முறையாக, அப்துல் கலாமின் உருவம் பொறித்து, 2,020 கிலோவில் தயாரிக்கப்பட்ட முதல் கேக் என, ஆசிய சாதனை புத்தக குழுவினர் உறுதி செய்தனர்.

இந்த கேக், 25 அடி நீளம், 31 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டது. கேக்கை, அப்துல் கலாமின் அண்ணன் மகன், ஏ.பி.ஜே.ஷேக் சலீம் வெளியிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of