2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை..! லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு..!

4513

2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என 5 விடுமுறை தினங்கள் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட 5 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 2 தினங்களும், ஜூலையில் ஒருநாளும், ஆகஸ்டில் 3 தினங்களும், செப்டம்பரில் ஒரு நாளும், அக்டோபர் மாதத்தில் 4 தினங்களும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தீபாவளியும், டிசம்பரில் கிறிஸ்துமஸ் என மொத்த 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement