தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

881

தீபாவளிக்கு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தலைமை செயலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையொட்டி 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 ஆகிய நாட்களில் சுமார் 11 ஆயிரத்து 367 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

மற்ற வெளி ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தீபாவளி சிறப்பு பேருந்துக்காக முன்பதிவு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதற்காக சென்னையில் 29 முன்பதிவு மையங்கள் செயல்படும் என கூறினார்.

கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரத்தில் 2 மையங்களும், பூந்தமல்லியில் ஒரு மையமும் செயல்படும் என அவர் தெரிவித்தார். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement