குஜராத் கிர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 21 சிங்கங்கள் உயிரிழப்பு

230

அகமதாபாத்: குஜராத் மாநிலத்திலுள்ள கிர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 21 சிங்கங்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதியிலிருந்து 19-ந் தேதி வரை 11 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், அடுத்த 10 நாட்களில் 10 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே கல்லீரல் மற்றும் சிறுநீரக பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடையாளம் தெரியாத தொற்றுநோய் காரணமாகவே சிங்கங்கள் உயிரிழந்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிங்கங்கள் தங்களுக்கு சண்டையிட்டு கொண்டதாலும் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை விலங்குகள் பாதுகாவலர் துஷ்யந்த் வஷவ்தா கூறுகையில், சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம் ஜூனாகாத்திலுள்ள தேசிய கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கவனித்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குஜராத் அரசாங்கம் சிங்கங்கள் தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அமெரிக்காவிலிருந்து பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது எனக் கூறினார். கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, கிர் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here