21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நேர்காணல்

232

திமுக சார்பில் 21 சட்டமன்றத்தொகுதிகளுக்கான விரும்பும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையடுத்து திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.

முதல்வருக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருவாரூர், திருப்பரங்குன்றம், ஓசூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஏற்கனவே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரி வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

]

அதன்படி இன்று வேட்பாளர்களுக்கான நேர்காணலை நடத்த திமுக திட்டமிட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது.

முதலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் 21 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்த திமுக திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of