21 லட்சம் நன்கொடை – பிரதமர்

89
modi-7.3.19

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு கடந்த மாதம் சென்று புனித நீராடினார். அப்போது அவர் பல கோடி மக்கள் வந்து சென்ற இடத்தை மிகவும் தூய்மையாக வைத்திருந்த துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களை பாராட்டினார். மேலும் அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய சொந்த சேமிப்பு நிதியில் இருந்து கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களின் நல நிதிக்கு ரூ.21 லட்சம் நன்கொடை வழங்கினார். இது முதற்கட்டம் தான், மேலும் இது போன்ற நடவடிக்கை தொடரும் என பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.