கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு அறிவிப்பு

359

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளதுநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களை நியமித்துள்ளது. அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் உள்ளனர். தேர்தல் பிரச்சார குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த குழுவில் ஜே.எம்.ஹாரூன்,  விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்பட 35 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of